• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்
- பல்வேறுபட்ட நிறுவனங்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரிப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சருவதேச அங்கீகாரம் ஏற்புடைத்ததாக்கும் பண்டங்களுக்கான வசதிகளை செய்யும் பொருட்டு புதிய தேசிய துணைப்பிரிவு சுங்க குறியீடுகள் சில புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உருவாக்கப்பட்ட சுங்க குறியீடுகளை 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க அரசிறை பாதுகாப்பு கட்டளைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் 2022‑01‑11 ஆம் திகதியன்று அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், இந்தப் புதிய தேசிய துணைப்பிரிவு சுங்க குறியீடுகள் நிதி அமைச்சரின் உடன்பாட்டுடன் 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் வர்த்தக அமைச்சரினால் கட்டளையொன்றாக வௌியிடப்பட்டுள்ளது. 2022‑01‑11 ஆம் திகதியன்று அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டளையினை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.