• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மத்திய வங்கியின் 2021 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- இலங்கை மத்திய வங்கியின் 2021 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையானது நாணய சபையினால் 2022‑04‑29 ஆம் திகதியன்று மாண்புமிகு நிதி அமைச்சருக்கு சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. நிதி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் பாராளுமன்ற கூட்டத் தொடரொன்று நடைபெறுகின்றதாயின் ஆண்டறிக்கை கிடைக்கப்பெற்று 14 நாட்களுக்குள் நிதி அமைச்சர் குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கிணங்க, இலங்கை மத்திய வங்கியின் 2021 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.