• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1974 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க தேசிய நீரவழங்கல், வடிகாலமைப்பு சபைச் சட்டத்தை திருத்துதல்
- நீர்வழங்கல் துறையில் தற்போதுள்ள மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் 1974 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க தேசிய நீரவழங்கல், வடிகாலமைப்பு சபைச் சட்டத்தை திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதன் பொருட்டு ஆரம்ப வரைபொன்றினை தயாரிக்கும் பொருட்டு நீர்வழங்கல் அமைச்சின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு 2021‑07‑12 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த குழுவினால் தயாரிக்கப்பட்டுளள ஆரம்ப வரைவினை அடிப்படையாகக் கொண்டு சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீர்வழங்கல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.