• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 2022 மார்ச் மாதம் 10 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக தெரிவுசெய்யப்பட்ட அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமாக தேவைப்படாத பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் பொருட்டு 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ளதும் 2022‑04‑09 ஆம் திகதியிடப்பட்டதும் 2274/42 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக பிரசுரிக்கப்பட்டுள்ளதுமான 2022 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.