• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொம்பன் யானையான நதுங்கமுவ ராஜாவை தேசிய பொக்கிஷமாக பிரகடனப்படுத்துதல்
- நாட்டின் பல பிரதான வணக்கஸ்'தலங்களில் பல்வேறுபட்ட பெரஹரா வைபவங்களில் கலந்து கொண்டுள்ள அத்துடன் 2005 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டுவரை 13 சந்தர்ப்பங்களில் ஶ்ரீ தலதா மாளிகையின் பெரஹரா கரண்டுவவை தாங்கிச் சென்ற கொம்பன் யானையான நதுங்கமுவ ராஜா 2022‑03‑07 ஆம் திகதியன்று உயிர் நீத்தது. தற்போது இந்த கொம்பன் யானையின் உடலை பாதுகாத்து வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நாட்டின் காலாசார நிகழ்வுகளுக்கு வழங்கிய பங்களிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, கொம்பன் யானையான நதுங்கமுவ ராஜாவை தேசிய பொக்கிஷமாக பிரகடனப்படுத்தும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.