• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துதல்
- நாட்டின் சகல பொருளாதார செயற்பாடுகளுக்கும் எரிபொருள் அத்தியாவசியமானதாகையினால் பொருளாதார ரீதியாக தெரிவு செய்யப்பட்ட விசேட துறைகளுக்கு அவர்களுக்குத் தேவையான எரிபொருளை வெவ்வேறாக இறக்குமதி செய்து பயன்படுத்துவறத்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பெற்றோலிய இறக்குமதியின் பொருட்டு முறையாக இனங்காணப்படும் தரப்புகளுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.