• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்திற்கு திருத்தங்களை அறிமுகப்படுத்துதல்
- 2013 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்த) சட்டத்தினால் திருத்தப்பட்ட 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தை திருத்தும் பொருட்டு சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கிணங்க, இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.