• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யப்பான் யுரேஷியா மன்றத்தின் மூலம் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு ஆராய்ச்சி நிதி உதவியினை வழங்குதல்
- “ஆசிய கருத்துக்கான கலாசார உறவு" என்னும் தொனிப் பொருளின் கீழ் கற்கை நெறியொன்றை நடாத்துவதற்கு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு யப்பான் யுரேஷியா மன்றத்தினால் ஆராய்ச்சி கொடையொன்றாக 42,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கொடையொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடையின் கீழ் 200 மாணவர்களை ஆட்சேர்ப்புச் செய்து உரிய பாடநெறியினை நடாத்துவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.