• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல் மருத்துவ பணிகளுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களை வழங்குவதற்கான கேள்வி
- நோயாளிகளின் பல் அறுவைச் சிகிச்கைக்காகப் பயன்படுத்தப்படும் பல் நுகர்வுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டிலான பெறுகை சார்பில் சருவதேச ரீதியில் போட்டிகரமான கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, இதன் பொருட்டு 09 விலை முன்வைப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன. தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவின் சிபாரிசின் மீது அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலை முன்வைப்பினை செய்த கேள்விதாரர்களுக்கு இந்தக் கேள்விகளை வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய கேள்விகளை வழங்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.