• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
டிஜிட்டல் அரசாங்கத்திற்கான மின்னஞ்சல் மற்றும் ஒத்துழைப்பு கொள்கை
- தொழினுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகமொன்றை உருவாக்குவது அரசாங்கத்தின் தேசிய கொள்கை கட்டமைப்பின் பிரதான நோக்கமாகும். இதன்கீழ் பிரசைகளை மையப்படுத்திய டிஜிட்டல் அரசாங்கமொன்றை உருவாக்குதல் மற்றும் டிஜிட்டல் ரீதியில் பலப்படுத்தப்பட்ட பொருளாதாரமொன்றை உருவாக்குதல் என்பன அரசாங்கத்தின் தொலை நோக்கினை அடைவதற்கான மூலோபாயங்களாக இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அரசாங்க அலுவலகங்களில் பாவனைக்காக சமகால தேவைகளுக்கு ஏற்ற ஆற்றலை குறைத்து - அதிகரிக்கக்கூடிய பாதுகாப்பான தொடர்பாடல் களமொன்றை உருவாக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதன்கீழ் மையப்படுத்தப்பட்ட ரீதியில் கட்டுப்படுத்தப்படும் மற்றும் முக்கியமாக அரசாங்கத்தின் பயன்பாட்டிற்காக மிக பரந்துபட்ட மின்னஞ்சல் மற்றும் ஒன்றிணைந்த தீர்வொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வேலைத் திட்டத்தின் கீழ் அரசாங்க நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மற்றும் 100,000 ஒன்றிணைந்த தீர்வுகள் பாவனையாளர் கணக்குகளை ஆரம்பிப்பதற்கும் இதன் முதற்கட்டமாக 30,000 பாவனையாளர் கணக்குகளை துரிதமாக ஆரம்பிப்பதற்கும் தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு தொழினுட்ப அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.