• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி கருத்திட்டத்தின் நீர் கசிவு காரணமாக பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு உரித்தாகும் நிவாரணங்கள் மற்றும் சுவீகரிக்கப்பட்ட காணிகள் சார்பில் மாற்றுக் காணிகளை வழங்குதல்
- உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி கருத்திட்டத்தின் சகல நிர்மாணிப்பு பணிகளும் தற்போது முடிவடைந்து வருகின்றதோடு, இந்தக் கருத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு நிவாரணம் வழங்குதல் எதிர்வரும் ஆறு (06) மாத காலத்திற்குள் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த பல்நோக்கு அபிவிருத்தி கருத்திட்டத்தின் சுரங்க அகழ்வின் போது ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணித் துண்டுகள் சார்பில் அரசாங்க காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் இறையிலி கொடைப் பத்திரங்களை வழங்குவதற்கும் மணிசரிவு ஆபத்து காரணமாக தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி நிறுவகத்தினால் அப்புறப்படுத்துவற்கு சிபாரிசு செய்துள்ள முழு நட்டஈடு வழங்கப்பட வேண்டிய வீடுகளுக்கு துரிதமாக நட்டஈடு செலுத்துவதற்கும் மீளக் குடியமர்த்த வேண்டிய வீட்டு உரிமையாளர்களின் ஆரம்ப குடியிருப்பு காணிகளில் திட்டவட்டமான நிபந்தனைகளின் கீழ் பயிர் செய்வதற்கு வாய்ப்பு வழங்குவதற்குமாக நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.