• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில் மற்றும் ஏனைய துறைகளில் பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக யப்பான் Ehime பிராந்தியத்துடன் ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளல்
- யப்பான் Ehime பிராந்தியத்தின் கமத்தொழில், உணவு பதனிடல் உட்பட ஏனைய தொழில் துறைகள் மற்றும் முக்கியமாக இந்த பிரதேசத்தில் பிரபல்யமான Citrus செய்கை துறையில் நிலவும் தொழில் வாய்ப்புகளில் ஈடுபடுவதற்கு இலங்கையைச் சேர்ந்த தொழினுட்ப பயிலுநர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு இந்த பிராந்தியத்தினால் சமர்ப்பித்துள்ள பிரேரிப்புக்கு அமைவாக தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு 2021‑07‑26 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க, விசேட திறன்களைக் கொண்ட இங்கையர்களுக்கு உரிய தொழில் மற்றும் பயிற்சி வாயப்புக்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் வௌிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சுக்கும் யப்பான் Ehime பிராந்தியத்திற்கும் இடையில் ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.