• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விவாகப் பதிவு கட்டளைச் சட்டத்திற்கான திருத்தம்
- வௌிநாட்டில் மேற்கொள்ளப்படும் விவாகரத்துக்களைப் பதிவு செய்தல், திருமணம் வெற்றாதல் அல்லது நீதிமன்றம் சார்ந்த உறவு பிரிவுகளை ஏற்றுக் கொள்தல் சம்பந்தமாக புதிதாக சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, அதற்கிணங்க சட்டவரைநரினால் ஏற்கனவே சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது. விவாகப் பதிவு கட்டளைச் சட்டத்தில் விவாகப் பதிவுக்காக பூர்த்தி செய்யப்பட வேண்டிய கட்டளைகள் உள்வாங்கப்படவேண்டுமென்பதோடு, வௌிநாட்டில் மேற்கொள்ளப்படும் விவாகரத்துக்களைப் பதிவு செய்தல், திருமணம் வெற்றாதல் அல்லது நீதிமன்றம் சார்ந்த உறவு பிரிவுகள் சார்பில் ஏற்பாடுகளை இந்தக் கட்டளைச் சட்டத்தில் இல்லாமையினால் விவாகப் பதிவு கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கும் இதன் பொருட்டு சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.