• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழில் பிணக்கு (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- சேவைக் கொள்வோர்களினால் சட்டங்களிலுள்ள ஏற்பாடுகளை மீறுதல் மற்றும் ஊழியர்களுக்குரிய நியதிச்சட்ட உரிமைகளை அறவிடுதல் போன்ற குறுகிய காலத்தினுள் தீர்க்கக்கூடிய வழக்குகள் பாரிய அளவில் நீதவான் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளதோடு, இவை சம்பந்தமாக தீர்ப்புகளை வழங்குவதற்கு நீண்டகாலம் எடுக்கின்றமை தெரிய வந்துள்ளது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தொழில் சட்டங்களின் கீழ் தொடுக்கப்படும் வழக்குகளை துரிதமாக தீர்ப்பதற்கு நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் தொழில் நியாயசபைகளுக்கு ஒருங்கிணைவாக நீதிமன்ற அதிகாரத்தினை கையளிக்கும் விதத்தில் தொழில் பிணக்கு (விசேட ஏற்பாடுகள்) சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட குறித்த இந்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.