• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குறைந்த வசதிகளுடன் வசிக்கும் வாடகை குடியிருப்பாளர்களுக்கு வாடகை கொள்வனவு வீட்டுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- காணி மற்றும் வீடுகள் இல்லாமையினால் குறைந்த வசதிகளுடன் வசிக்கும் வாடகை வீட்டு குடியிருப்பாளர்களின் வீட்டு பிரச்சினைக்கு தீர்வினை வழங்கும் நோக்கில் "வாடகை கொள்வனவு வீடு" என்னும் பெயரில் வீட்டுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் கீழ் நான்கு மாடி வீட்டு கட்டடத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கும் முதலாம் கட்டத்தின் கீழ் மாகாண மட்டத்தில் 464 வீடுகளைக் கொண்ட ஒன்பது வீடமைப்புக் கட்டத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்படும் பயனாளிகளுக்கு அடிப்படை கொடுப்பனவினை செலுத்துவதற்கான ஆற்றல் இல்லாமையினால் மாதாந்தம் 15,000/- ரூபாவைக் கொண்ட வாடகை தொகையொன்றை 31 வருட காலத்திற்குள் அறவிடுவதற்கும் இரண்டாம் அல்லது மூன்றாம் பரம்பரைக்கு வீட்டின் உரிமையை உடைமையாக்குவதற்கு இயலுமாகும் வகையிலும் எவ்வித காரணத்தின் மீது வீட்டினை விற்பனை செய்யமுடியாத விதத்திலும் பயனாளிகளுடன் உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்வதற்கும் உத்தேச கருத்திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.