• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் நெதர்லாந்திற்கும் இடையில் இருதரப்பு விமான சேவைகள் உடன்படிக்கை
- இலங்கைக்கும் நெதர்லாந்திற்கும் இடையில் இருதரப்பு விமான சேவைகள் உடன்படிக்கையொன்றினை கைச்சாத்திடுவதற்கு 2019 யூலை மாதம் 30 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும், இந்த உடன்படிக்கை இதுவரை கைச்சாத்திடப்படவில்லை. ஆதலால் விமானதுறை சார்ந்த பணிகள் தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவினை மேலும் விருத்தி செய்யும் நோக்கில் இந்த விமானசேவைகள் உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.