• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சீனாவின் Academy of Agriculture Mechanization Science நிறுவனத்திற்கும் கமத்தொழில் திணைக்களத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை கைச்சாத்திடுதல்
- கமத்தொழில் இயந்திர சாதனங்கள் துறைசார்ந்த ஒத்துழைப்பு தொடர்பில் சீனாவின் Academy of Agriculture Mechanization Science நிறுவனத்திற்கும் கமத்தொழில் திணைக்களத்திற்கும் இடையில் 2017 ஆம் ஆண்டில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் காலம் ஏற்கனவே முடிவடைந்துள்ளமையினால் இருதரப்புக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் கமத்தொழில் இயந்திரசாதனங்கள் தொடர்பிலான மாதிரி கிராமங்களை நிறுவுதல், கமத்தொழில் இயந்திர சாதனங்கள் பற்றிய நிபுணர்களை பரிமாறிக் கொள்தல், பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் கமத்தொழில் இயந்திரசாதனங்கள் சார் மாதிரி நிலையங்களை தாபித்தல் மற்றும் கமத்தொழில் இயந்திரசாதனங்கள் தொடர்பில் கூட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல் போன்ற துறைகள் சம்பந்தமாக ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுப்பது இருதரப்பினரினதும் எதிர்பார்ப்பாகும். இதற்கிணங்க, புரிந்துணர்வு உடன்படிக்கையினை இருதரப்புக்கும் இடையில் கைச்சாத்திடும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.