• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Skills for Inclusive Economic Growth (S4IG)' கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் அவுஸ்திரேலியா அரசாங்கத்துடன் உத்தேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
- அவுஸ்திரேலியா அரசாங்கத்துடன் 2017 ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக இந்நாட்டின் சுற்றுலாத்துறையின் பெறுமதியினை விருத்தி செய்வதற்காக சுற்றுலாத்துறையின் தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதனை நோக்காகக் கொண்டு, அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள 15 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் கொண்ட நிதி கொடையின் மீது "Skills for Inclusive Economic Growth (S4IG)' கருத்திட்டத்தை திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்நறுவை ஆகிய மாவட்டங்களில் 04 வருட காலத்திற்குள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தக் கருத்திட்டத்தின் 1 ஆவது கட்டம் முடிவடைந்துள்ளதோடு, இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்கு 12 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களைக் கொண்ட நிதி கொடையொன்றை வழங்குவதற்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. கருத்திட்டத்தின் ஆரம்ப கட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 04 மாவட்டங்களுக்கு மேலதிகமாக அநுராதபுரம் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களையும் இரண்டாம் கட்டத்தில் சேர்த்து இந்தக் கருத்திட்டத்தை 2024 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.