• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புத்தாக்க முறைமைகளை வலுப்படுத்துதல்
- இலங்கையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஒத்தாசையுடன் தெற்காசியாவின் முன்னணி சமூக ஆராய்ச்சி நிறுவனமாக 2018 ஆம் ஆண்டில் "Citra நிறுவனம்" தாபிக்கப்பட்டுள்ளது. Citra புத்தாக்க ஆராய்ச்சி நிறுவனமானது கடந்த காலப்பகுதியில் அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை பங்காளர்களின் ஒத்துழைப்புடன் செயலாற்றி குறிப்பிடத்தக்க பணியினை நிறைவேற்றியுள்ளது. இதற்கிணங்க கடந்த காலத்தில் பெற்றுக் கொண்டுள்ள அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் பங்களிப்புடன் Citra சமூக புத்தாக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் இரண்டாம் கட்டத்திற்கான பணிகளை நடைமுறைப்படுத்து வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. Citra சமூக புத்தாக்க ஆராய்ச்சி நிறுவனமானது உலகில் ஏனைய நாடுகளில் போன்று பிரதம அமை்சசரின் அலுவலகத்தின் நேரடி வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஒத்தாசை கிடைக்கப் பெறும் கருத்திட்டமாக தொடர்ந்தும் நடாத்திச் செல்வதற்கும் இதன் பொருட்டு பிரதம அமைச்சரின் செயலாளரினதும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் இந்நாட்டு நிரந்தர பிரதிநிதியினதும் வழிகாட்டலின் கீழ் செயற்படும் கருத்திட்ட நிர்வாக சபையொன்றை தாபிப்பதற்குமாக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.