• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முதலீட்டு ஊக்குவிப்பு பற்றிய அமைச்சர்கள் குழுவை நியமித்தல்
- அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக தேசிய ரீதியில் முக்கியத் துறைகளின்பால் கவனம் செலுத்தி, அவை தொடர்புபட்ட துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை இனங்கண்டு மேம்படுத்துவதற்குத் தேவையான கொள்கை ரீதியிலானதும் நடைமுறை ரீதியிலானதுமான தீர்வுகளை வழங்கும் நோக்கில் அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமையில் மாண்புமிகு பிரதம அமைச்சர் அடங்கலாக உரிய அமைச்சர்களையும் இராஜாங்க அமைச்சர்களையும் கொண்ட "முதலீட்டு ஊக்குவிப்பு பற்றிய அமைச்சர்கள் குழுவை" நியமிப்பதற்கும் இந்த அமைச்சர்கள் குழுவுக்கும் ஒத்தாசை நல்கும் பொருட்டு சனாதிபதியின் செயலாளரின் தலைமையில் உரிய அமைச்சுக்களினதும் இராஜாங்க அமைச்சுக்களினதும் செயலாளர்கள் மற்றும் ஏனைய உரிய உத்தியோகத்தர்களையும் கொண்ட உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிப்பதற்குமாக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.