• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்கு செய்யப்படும் திருத்தங்கள்
- 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் தௌிவினை அதிகரிப்பதற்கும் முரண்பாடுகளை நீக்குவதற்கும் திருத்தப்பட வேண்டிய ஏற்பாடுகள் சில நிதி அமைச்சினால் இனங்காணப்பட்டுள்ளது. அதேபோன்று பொருளாதாரத்தில் அபிவிருத்தியடைந்துவரும் துறைகளுக்கு சலுகை வழங்கி முதலீடு மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பினை வழங்குவதோடு, வரி அதிகரித்தல் மற்றும் வரி செலுத்துகையை இலகுப்படுத்தல் சம்பந்தமாக பல்வேறுப்பட்ட தரப்பினர்களினால் சமர்பபிக்கப்பட்ட பிரேரிப்புகளின் மீது சில திருத்தங்களை உள்நாட்டு இறைவரி சட்டத்திற்கு அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க இனங்காணப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடக்கி 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டதை திருத்துவதற்கும் இதன் பொருட்டு சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.