• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2022‑06‑01 ஆம் திகதியிலிருந்து 2022‑12‑31 ஆம் திகதிவரையிலான ஏழு (07) மாத காலத்திற்கான பெற்றோலியம் இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம்
- 2022 யூன் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் 2022 திசெம்பர் மாதம் 31 ஆம் திகதிவரையிலான ஏழு (07) மாதக் காலப்பகுதிக்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்யும் நீண்டகால ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு கேள்வி கோரப்பட்டுள்ளது. உரிய பெறுகையை ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்தின் Coral Energy D.M.C.C கம்பனிக்கு வழங்குவதற்கு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இந்த சிபாரிசுகளின் பிரகாரம் உரிய ஒப்பந்தத்தை இந்த நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.