• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2022 சிறுபோகத்தில் நெற்செய்கைக்காக சுற்றாடல் நட்புறவுமிக்க உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பசளை கொள்வனவு செய்தல்
- 2022 சிறுபோகத்தில் நெற்செய்கைக்காக மதிப்பிடப்பட்டுள்ள காணியின் அளவு 600,000 ஹெக்டயார்களாகும். இதன் பொருட்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சுற்றாடல் நட்புறவுமிக்க பசளை கொள்வனவு செய்வதற்கு 2022 சனவரி மாதம் 10 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உள்நாட்டில் போட்டி கேள்வி முறையினைப் பின்பற்றி கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின்மீது கேள்விகளை வழங்குதற்கு 46 கேள்விதாரர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த கேள்விதாரர்களுக்கு 2022 சிறுபோகத்தில் நெற்செய்கைக்காக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சுற்றாடல் நட்புறவுமிக்க பசளையினை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை கையளிக்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.