• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Human Albumin Solution BP / Ph Eur 20% கொண்ட 50 ml புட்டிகள் 360,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
- பல்வேறுப்பட்ட நோய் நிலைமைகளுக்கு ஆளாகியுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்த மருந்து பயன்படுத்தப்படுகின்றதோடு, இந்த மருந்தினை கொள்வனவு செய்வதற்கு சர்வதேச போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. தொழிநுட்ப மதிப்பீ்ட்டுக் குழுவின் சிபாரிசினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அனுசரணையான ஆகக்குறைந்த விலையினை முன்வைத்துள்ள கேள்விதாரரான சுவிற்சர்லாந்தின் M/s Baxalta GmbH, கம்பனிக்கு உரிய பெறுகையை வழங்குவதற்கு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க உரிய பெறுகையை வழங்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.