• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
துகள்களை வடிகட்டும் 3,000,000 முகக் கவசங்களை வழங்குவதற்கான கேள்வி
- சுவாச வழியில் தொற்று ஏற்படுவதனை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் இந்த முகக் கவசங்களை கொள்வனவு செய்யும் பொருட்டு சர்வதேச போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. தொழிநுட்ப மதிப்பீ்ட்டுக் குழுவின் சிபாரிசினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் உரிய பெறுகையை அனுசரணையான ஆகக்குறைந்த விலையினை முன்வைத்துள்ள கேள்விதாரரான Lucky Industries தனியார் கம்பனிக்கு வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க உரிய பெறுகையை வழங்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.