• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Biphasic Isophane இன்சியுலின் BP 30/70, 1,000 IU/10ml தடுப்பூசி 1,900,000 புட்டிகள் வழங்குவதற்கான கேள்வி
- நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் இந்த தடுப்பூசியினை கொள்வனவு செய்வதற்கு சர்வதேச போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் அனுசரணையான ஆகக்குறைந்த விலையினை முன்வைத்துள்ள இந்தியாவின் Wockhardt Limited, நிறுவனத்திற்கு இந்தப் பெறுகையை வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க உரிய மருந்தின் 1.5 மில்லியன் மருந்து அளவை மாத்திரம் வழங்கும் ஒப்பந்தத்தை இந்தியாவின் . Wockhardt Limited, நிறுவனத்திற்கு வழங்குவதற்கும் மீதி தடுப்பூசி தொகையை உண்மையான நுகர்வின் மீது எதிர்காலத்தில் கொள்வனவு செய்வதற்குமாக சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.