• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனின் கீழ் நடுக்குடா, சுன்னாகம், ஆனியாகந்த நெய்யறி துணை மின்நிலையங்களின் விரிவாக்கம்
- இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு சர்வதேச போட்டிக் கேள்வி முறையினைப் பின்பற்றி கேள்வி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் உரிய ஒப்பந்தத்தை TBEA Shenyang Transformer Group மற்றும் Ceylex Engineering Ltd கூட்டு தொழில் முயற்சிக்கு கையளிப்பதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இந்த சிபாரிசுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கிணங்க உரிய ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.