• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஒரேதடவையில் வழங்கப்படும் வலுவூட்டுவதற்கான கொடுப்பனவை வழங்குதல்
- இழப்பீட்டு கொள்கை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக பல்வேறு நிலைமைகளின் கீழ் பாதிக்கப்பட்ட பிரசைகளுக்கு அவர்களுடைய வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஒத்தாசை நல்குவதற்கு கொள்கைகள் தயாரிக்கப் பட்டுள்ளன. இதற்கிணங்க எதிர்கால சந்ததியினர் உட்பட சகல இலங்கையினர்களினதும் நலனோம்பல் மற்றும் பாதுகாப்பின் பொருட்டு நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள கொள்கைகளுக்கு இணங்க உரிய குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கவேண்டியுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலக சட்டத்தின் மூலம் காணாமல் போனவர்கள் சம்பந்தமாக உரிய விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் மரணச்சான்றிதழ் அல்லது காணவில்லை என்னும் சான்றிதழை வழங்குதவற்கு பதிவாளர் நாயகத்திற்கு சிபாரிசு செய்யப்படும். இதற்கிணங்க, காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தினால் கண்டறியப்படும் விடயங்களின் மீது பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும் காணவில்லை என்னும் சான்றிதழொன்றுள்ள காணமல் போனவரின் கிட்டிய உறவினருக்கு குடும்பத்தை வலுவூட்டுவதன் சார்பில் ஒரேதடவையில் மாத்திரம் வழங்கப்படும் 100,000/- ரூபாவைக் கொண்ட கொடுப்பனவொன்றை வழங்கும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.