• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில், வனாந்தரங்கள் மற்றும் பிற காணி பயன்பாட்டு துறை தொடர்பில் வௌிப்படைத்தன்மை மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பொன்றை தாபிக்கும் கருத்திட்டம்
- இலங்கை 1993 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகளின் காலநிலை பற்றிய கட்டமைக்கப்பட்ட சமவாயத்தின் தரப்பு நாடொன்றாக செயலாற்றி வருகின்றதோடு, 2016 ஆம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கம் அளித்துள்ளது. பாரிஸ் உடன்படிக்கையின் தேசிய கேந்திர நிலையமாக சுற்றாடல் அமைச்சு செயலாற்றுகின்றது. இந்த உடன்படிக்கையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இலங்கையின் தேசிய ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு 2021 யூலை மாதம் 30 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் பற்றிய கட்டமைக்கப்பட்ட சமவாயத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, இதன் கீழ் பிரதான இரண்டு துறைகளாக கமத்தொழில் மற்றும் வனாந்தரங்கள் இனங்காணப்பட்டுள்ளன. பாரிஸ் உடன்படிக்கையின் 13 ஆம் பிரிவிற்கு அமைவாக தரப்பு நாடொன்றினால் காலநிலை மாற்றம் சம்பந்தமாக எடுக்கப்படும் செயற்பாடுகளின் முன்னேற் றமானது வௌிப்படைத் தன்மையுடன் அறிக்கையிடப்படுதல் வேண்டும். இதற்கிணங்க கமத்தொழில், வனாந்தரங்கள் மற்றும் பிற காணி பயன்பாட்டு துறை தொடர்பில் வௌிப்படைத்தன்மை மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பொன்றை தயாரிக்கும் பொருட்டு உலகளாவிய சுற்றாடல் வசதிகளுக்கான நிதி உதவியின் கீழ் சுற்றாடல் அமைச்சின் ஆலோசனையின் மீதும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் கமத்தொழில் அமைப்பின் ஒத்துழுப்புடனும் கருத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உலகளாவிய சுற்றாடல் வசதிகளின் கீழ் 863,242 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கொடையொன்றை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் கமத்தொழில் அமைப்பானது உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்காக உரிய கொடையினை பெற்றுக் கொள்வதற்கும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் கமத்தொழில் அமைப்புடன் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கும் சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.