• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடமத்திய பாரிய கால்வாய் கருத்திட்டத்திற்குரிய களுகங்கை ‑ மொறகஹகந்தையை இணைக்கும் சுரங்க அகழ்வின்போது அப்புறப்படுத்தப் படும் சுரங்கக் கழிவுகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்குதல்
- ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியின் கீழ் செயற்படுத்தப்படும் மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் வடமத்திய பாரிய கால்வாய் கருத்திட்டத்தின் ஆக்கக்கூறொன்றான களுகங்கை ‑ மொறகஹகந்தை இணைக்கும் சுரங்க அகழ்வின்போது அப்புறப்படுத்தப்படும் சுரங்கக் கழிவுகள் தற்காலிக அடிப்படையில் வனபாதுகாப்புத் திணைக் களத்திற்குச் சொந்தமான ஒதுக்கு காணிகளில் சேகரிக்கப்படுகின்றன. இந்த கழிவுகள் நிர்மாணிப்பின் பொருட்டு நேரடியாக பயன்படுத்துவதற்கான சாத்தியமற்ற கருங்கற்களை கொண்டுள்ளன. சுரங்க நிர்மாணிப்பு காரணமாக புனரமைப்பு மற்றும் விருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள இலுக்கும்புரை யிலிருந்து லக்கல வரையிலான 9.3 கிலோமீற்றர் வீதியின் புனரமைப்பு மற்றும் விருத்தி பணிகள் சார்பிலும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 100,000 கிலோமீற்றர் வீதி நிர்மாணிப்பு கருத்திட்டத்திற்குத் தேவையான ABC மூலப்பொருள் உற்பத்தி சார்பிலும் பயன்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் இந்த கழிவுகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு இலவசமாக வழங்கும் பொருட்டு நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.