• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020 பரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற திரு.ஹேரத் முதியன்சேலாகே தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு வீடொன்றை வழங்குதல்
- யப்பான் டோக்கியோ நகரத்தில் நடாத்தப்பட்ட 2020 பரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று திரு.ஹேரத் முதியன்சேலாகே தினேஷ் பிரியந்த ஹேரத் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார். நாட்டிற்கு இந்த பெருமையினை ஈட்டித்தந்த அர்ப்பணிப்பினை மெச்சும் விதத்தில் அவருக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் செயற்படுத்தப்பட்டுவரும் கொம்பனி தெரு மெட்றோஹோம் வீடமைப்பு கருத்திட்டத்திலிருந்து 14.2 மில்லியன் ரூபா பெறுமதிமிக்க வீட்டு அலகொன்றை இறையிலி கொடையொன்றாக உடைமையாக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.