• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் ரஷ்ய கூட்டரசாங்கத்தின் UFA அரசாங்க விமான சேவைகள் தொழினுட்ப பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- இரு நாடுகளுக்கும் இடையில் பேணப்பட்டு வரும் சிறந்த உறவினை மேலும் பலப்படுத்துதல், விமான மற்றும் செய்மதி பொறியியல் துறை சார்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பினை மேம்படுத்துதல், பரஸ்பர அக்கறையுள்ள துறைகளில் ஆராய்ச்சிகளை நடாத்துவதற்கு கல்விமான்கள் மற்றும் நிபுணர்களை பரிமாறிக் கொள்தல் போன்ற நோக்கங்களுடன் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் ரஷ்ய கூட்டரசாங்கத்தின் UFA அரசாங்க விமான சேவைகள் தொழினுட்ப பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.