• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஏற்றுமதி முன்னேற்றத்தினை அடிப்படையாகக் கொண்ட ஊக்குவிப்பு கொடுப்பனவுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- ஏற்றுமதியாளர்கள் முகங்கொடுத்துள்ள கடும் பணவீக்கம், கடும் அந்நிய செலாவணி பற்றாக்குறை, உற்பத்தி மூலப்பொருட்கள் இறக்குமதி செய்வதில் காணப்படும் வரையறைகள் மற்றும் உயர் கையாள்கை செலவுகள் போன்ற பிரச்சினைகளை குறைத்துக் கொள்வதற்கும் கடந்த ஆண்டில் பெற்றுக் கொண்ட செயலாற்றுகையை விஞ்சிய முன்னேற்றத்தினை நடப்பாண்டில் பெற்றுக் கொள்வதற்கும் இயலுமாகும் வகையில் ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. உத்தேச ஊக்குவிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2021 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி வருமானத்தினை விட 5,500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட மேலதிக வருமானமொன்றை 2022 ஆம் ஆண்டில் ஈட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க கடந்த ஆண்டின் உரிய காலாண்டிற்கு ஏற்ப ஆகக்குறைந்தது 10 சதவீத ஏற்றுமதி முன்னேற்றத்தினைப் பெற்றுக் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு உத்தேச ஊக்குவிப்பு கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் கடந்த காலாண்டில் ஈட்டிய ஏற்றுமதி வருமானத்தினை விட அதிகமாக ஈட்டும் ஒவ்வொரு ஐக்கிய அமெரிக்க டொலர்கள் சார்பில் 30/- வீதமான ஊக்குவிப்பு கொடுப்பனவொன்றை செலுத்தும் பொருட்டு வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.