• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அங்கீகாரம் கோரல்
- அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சந்தை விலையை நிலையாக பேணுவதன் மூலம் நுகர்வோருக்கு சலுகையினை வழங்குவதற்கும் உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் கொள்கை தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்குமாக 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வர்த்தக பொருட்கள் சம்பந்தமான 04 ஒழுங்குவிதிகள் வௌியிடப்பட்டுள்ளன. அதேபோன்று தேசிய துணை பிரிவிடல் HS சுங்க குறியீட்டு இலக்கத்தை உருவாக்குவதற்கும் சில தெரிவுசெய்யப்பட்ட பொருட்கள் மீது சுங்க இறக்குமதி வரியினை திருத்துதற்குமாக 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க வருமான பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளையொன்று நிதி அமைச்சரினால் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க குறித்த ஒழுங்குவிதிகளையும் கட்டளையையும் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.