• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைக்கான (அத்தியாயம் 101) திருத்தம் (XLII ஆம் அத்தியாயத்தை நீக்குதல்)
- அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் சட்டத்தின் விரிவான மறுசீரமைப்பின் பொருட்டு தாபிக்கப்பட்டுள்ள விசேட பிரிவின் உபகுழுவொன்றாக விவாக விடயங்கள் தொடர்பிலான சட்டங்களை வரையும் உபகுழுவானது தாபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவாகரத்து, தாம்பத்திய உறவு பிரிவு மற்றும் திருமணம் வெற்றாதலுக்கான காரணங்கள், திருமண வழக்கு நடவடிக்கை முறைகள் மற்றும் பிள்ளைகளின் கட்டுக்காப்பினை கையளிக்கும் போது கவனத்திற் கொள்ளப்படவேண்டிய விடயங்கள் சம்பந்தமாக அடிப்படை ஏற்பாடுகளை உள்ளடக்கிய வரைவொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. திருமண வழக்குகள் சம்பந்தமான நடவடிக்கை முறையானது குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவையின் XLII ஆம் அத்தியாயத்தில் உள்ளடக்கப்பட் டுள்ளதோடு, உத்தேச திருமண விடயங்கள் சார்பிலான சட்டங்களானது செயல்வலுவுக்கு வந்தவுடன் இந்த அத்தியாயமானது தேவையற்றதாகும். குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவையின் XLII ஆம் அத்தியாயத்தை நீக்குவதற்கும் இதன் பொருட்டு சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.