• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் (SPMC) லோட்டஸ் பார்மா செயற்றிட்டத்திற்கு (SPMC - Lotus Pharma Project) ஒரு சுயாதீன ஆலோசகரைப் பணிக்கமர்த்துதல்
- அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் (SPMC) லோட்டஸ் பார்மா செயற்றிட்டத்தை ஹொரண மில்லேவ பிரதேசத்தில் தாபிப்பதற்கு 2021 மார்ச் மாதம் 08 ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆலோசகர் ஒருவரை / ஆலோசனை நிறுவனமொன்றை தெரிவு செய்யும் பொருட்டு சர்வதேச ரீதியில் போட்டிகரமான கேள்வி வழிமுறையினை பின்பற்றுவதற்கு 2021 ஒக்றோபர் மாதம் 25 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சர்வதேச ரீதியில் போட்டிகரமான கேள்வி கோரப்பட்டுள்ளதோடு அனுசரணையான ஆகக்குறைந்த விலைமுன்வைப்பாளரான இந்தியாவின் M/s Meridian Engineers & Consultancy Services நிறுவனத்திற்கு உரிய பெறுகையை வழங்குவதற்கு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த நிறுவனத்தை உத்தேச கருத்திட்டத்தின் ஆலோசகராக நியமிக்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.