• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா நாடுகளின் முன்முயற்சி (BIMSTEC) அமைப்பின் தொழிநுட்ப பரிமாறல் வசதிகளை நிறுவுவதற்கான BIMSTEC ஒத்துழைப்பு ஒப்பந்தம்
- தொழிநுட்ப பரிமாற்றல் வசதிகளை தாபிப்பது தொடர்பிலான BIMSTEC ஒத்துழைப்பு ஒப்பந்தத்தினை செய்து கொள்வதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2022 மார்ச் மாதம் 30 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ள பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா சார்ந்த நாடுகளின் முன்முயற்சி (BIMSTEC) மாநாட்டின்போது திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சினால் BIMSTEC உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றுடனும் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.