• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொருளாதார சபையைத் தாபித்தல்
- பேரண்டப் பொருளாதார கொள்கை, COVID - 19 தொற்றுநிலைமையின் பின்னர் தேசிய பொருளாதாரத்தின் செயற்பாடு, பொருளாதாரத்தை மீளக் கட்டமைத்தல், அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை மற்றும் நிதி கொள்கை சார்பில் நேரடியாக தாக்கம் செலுத்தும் பிரதான அபிவிருத்தி கருத்திட்டங்கள் அடங்கலாக உள்நாட்டு பொருளாதார கொள்கைகள் தொடர்பில் ஆழமாக கலந்துரையாடி மொத்த பொருளாதாரத்தை முகாமிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்குடன் பொருளாதார சபையை வாராந்தம் கூட்டுவதற்கு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சபையின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக உரிய அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் தேவையான சந்தர்ப்பங்களில் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் மீது உரிய தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் பொருளாதார சபையின் கூட்டங்களுக்குத் தேவையானவாறு ஒவ்வொரு துறை சார்ந்த நிபுணர்களை அழைப்பதற்கும் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிணங்க பொருளாதார சபையின் கட்டமைப்பானது பின்வருமாறாகும்.

* அதிமேதகைய கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்,
சனாதிபதி - (தலைவர்.

* மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்,
பிரதம அமைச்சர்.

* மாண்புமிகு (கலாநிதி) பந்துல குணவர்த்தன அவர்கள்,
வர்த்தக அமைச்சர்.

* மாண்புமிகு ஜொன்ஸ்ரன் பெர்னாண்டோ அவர்கள்,
நெடுஞ்சாலைகள் அமைச்சர்.

* மாண்புமிகு பசில் ராஜபக்ஷ அவர்கள்,
நிதி அமைச்சர்.

* மாண்புமிகு மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள்,
கமத்தொழில் அமைச்சர்.

* மாண்புமிகு (மருத்துவர்) ரமேஷ் பத்திரன அவர்கள்,
பெருந்தோட்டத்துறை அமைச்சர்.

* திரு.அஜித் நிவாட் கப்ரால் அவர்கள்,
ஆளுநர், இலங்கை மத்திய வங்கி.

*. திரு.காமினி செனரத் அவர்கள்,
சனாதிபதியின் செயலாளர்.

* திரு.எஸ்.ஆர்.ஆட்டிகல அவர்கள்,
திறைசேரி செயலாளர்.

* திரு.தம்மிக்க நாணயக்கார அவர்கள்,
பிரதி ஆளுநர், இலங்கை மத்திய வங்கி.