• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா காலத்தினை நீடித்தல்
- இலங்கையில் 11,463 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளும் 3,993 உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளும் தற்போது தங்கியுள்ளனர். ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையில் வலுவடைந்துள்ள அரசியல் நெருக்கடி காரணமாக அவர்களுக்கு மீண்டும் அவர்களுடைய நாடுகளுக்கு செல்வதில் பிரச்சினையான நிலைமை எழுந்துள்ளது. ஆதலால், தற்போதைய நிலைமையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, குறித்த இந்த சுற்றுலாப் பயணிகளின் விசா காலத்தினை கட்டணமின்றி இரண்டு (02) மாத காலத்திற்கு நீடிக்கும் பொருட்டு சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.