• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2022‑02‑15 ஆம் திகதியிலிருந்து 2022‑10‑14 ஆம் திகதிவரை எட்டு (08) மாத காலத்தினுள் 1.8 மில்லியன் பெற்றோல் (92Unl) பீப்பாய்கள் இறக்குமதி செய்தல்
- 2022‑02‑15 ஆம் திகதியிலிருந்து 2022‑10‑14 ஆம் திகதிவரை எட்டு (08) மாத காலத்தினுள் 1.8 மில்லியன் பெற்றோல் (92Unl) பீப்பாய்கள் இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு பதிவுசெய்யப்பட்ட வழங்குநர்கள் மற்றும் தற்காலிகமாக பதிவு செய்து கொள்ளப்பட்ட வழங்குநர்களிடமிருந்து கேள்வி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இந்த நீண்டகால ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்தின் Ms. OQ Trading Limited நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.