• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுபோக நெற்செய்கை சார்பில் Muriate of Potash (Potassium Chloride) பசளை இறக்குமதி செய்தல்
- Muriate of Potash என்பது பரவலாக பயன்படுத்தப்படும் பொட்டாசியம் வகை பசளையொன்றாகும். இது விவசாயிகள் நெற்செய்கைக்காக கெட்டியாக்கும் பசளையொன்றாக பயன்படுத்துகின்றனர். 2022 சிறிபோகத்தில் விவசாயிகள் சுமார் 6 இலட்சம் ஹெக்டயார் கொண்ட நிலப்பரப்பில் நெற்செய்கை பண்ணவுள்ளதோடு, இதன் சார்பில் 38,500 மெற்றிக் தொன் Muriate of Potash பசளை தேவைப்படுமென கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சருவதேச போட்டி கேள்வி வழிமுறையினைப் பின்பற்றி குறித்த பசளை அளவினை இறக்குமதி செய்வதற்கும் அரசாங்கத்தின் பசளை மானிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த பசளையினை விவசாயிகளுக்கு வழங்குவதற்குமாக கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.