• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியிடலின் கீழ் மின்சார முறைமையின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கான கருத்திட்டம் ‑ பொதி 04
- ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியிடலின் கீழ் மின்சார முறைமையின் நம்பகத் தன்மையை மேம்படுத்துவதற்கான கருத்திட்டத்தின் பொதி 04 இன் கீழ் அனுப்பீட்டுக் கம்பி வழிகள் மற்றும் பகுதிகளை வடிவமைத்தல், விநியோகித்தல் மற்றும் நிர்மாணித்தல் என்பன பொருட்டு சருவதேச கேள்வி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் உரிய ஒப்பந்தத்தை China Machinery Engineering Corporation நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உரிய ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.