• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2021/2022 பெரும்போகத்தில் பசுமை கமத்தொழில் உள்ளீடுகளை பயன்படுத்துவது தொடர்பான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழிமுறை
- 2021/2022 பெரும்போகத்தில் நெல் அறுவடை குறைவடைந்ததன் காரணமாக பாதிக்கப்படும் விவசாயிகளின் வருமான மட்டத்தை பாதுகாப்பதற்கு நெல் கிலோகிராம் ஒன்றுக்கு 25/- ரூபா வீதம் நட்டஈடு செலுத்துவதற்கு பொருத்தமான வழிமுறையொன்றை பொதுத் திறைசேரியுடன் உசாவுதலைச் செய்து தயாரிப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உரிய தகவுத்திறன்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் நட்டஈட்டுத் தொகையினை மதிப்பீட்டு ஊக்குவிப்புக் கொடுப்பனவொன்றாக ஆகக்கூடுதலாக ஐந்து ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட பயிர்ச் செய்கை சார்பில் வழங்குவதற்கும் பிழைப்பாதார மட்ட சிறிய அளவிலான விவசாயிகளுக்கும் அதேபோன்று சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விவசாயிகளுக்கும் உரிய மதிப்பீட்டு ஊக்குவிப்பு கொடுப்பனவினை வழங்குவதற்கும் இயலுமாகும் வகையில் வழிமுறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வழிமுறையினை நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்குத் தேவையான நிதியினை சேதன பசளை உற்பத்தி மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்துகை மற்றும் நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழிநுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சிடமிருந்து கமத்தொழில் அபிவிருத்தி திணைக்களத்திற்கு வழங்குவதற்குமாக கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.