• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டுக்களில் ஈடுபடும்போது ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு எதிரான சமவாய சட்டத்தின் 34(1) ஆம் பிரிவின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் (தடைசெய்யப்பட்ட பட்டியல்) ஒழுங்குவிதிகள் 2022 சனவரி மாதம் 18 ஆம் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.