• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை நீதிமன்ற முறைமை சார்பில் நீதிமன்ற தன்னியக்க முறைமையொன்றை அறிமுகப்படுத்துதல்
- இலங்கை நீதிமன்ற முறைமை சார்பில் நீதிமன்ற தன்னியக்க முறைமையொன்றை வடிவமைத்து, வழங்கி, நடைமுறைப்படுத்தி பராமரிப்பதற்கான கருத்திட்டமொன்று இலங்கை தகவல், தொடர்பாடல் தொழிநுட்ப முகவராண்மையுடன் இணைந்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு 2020 பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உத்தேச கருத்திட்டம் சார்பில் 07 விலைமனுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் Dialog Broadband Networks (Pvt.) Limited கம்பனி, Formis Network Service கம்பனி மற்றும் Access International (Pvt.) Limited கம்பனி ஆகிய கூட்டு தொழில்முயற்சிக்கு குறித்த பெறுகையை வழங்கும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.