• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள், சத்திரசிகிச்சை மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஆய்வுகூட நுகர் பொருட்கள் என்பவற்றை கொள்வனவு செய்தல்
- சர்வதேச தரத்திற்கு அமைவாக இந் நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய மருந்துகள், சத்திரசிகிச்சை மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஆய்வுகூட நுகர் பொருட்கள் என்பவற்றின் உற்பத்தியினை மேம்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கையாகும். இதற்கிணங்க இந்த பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வௌிப்படைத் தன்மை மற்றும் வினைத்திறன் மிக்க முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் இந்த வழிமுறைக்கு அமைவாக எதிர்காலத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இந்தப் பொருட்களை கொள்வனவு செய்வதற்குமாக சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.