• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் 'சமூக உதவியாளர் (தொண்டர்)' ஆக இளைஞர் யுவதிகளின் சேவையைப் பெற்றுக் கொள்ளல்
- யப்பான் மற்றும் சிங்கபூர் போன்ற நாடுகளில் செயற்படுத்தப்படும் சமூக பொலிஸ் சேவை மூலம் சமூக மட்டத்தில் நிகழும் சிறிய குற்றங்களை குறைத்துக் கொள்ளும் சாத்தியம் இனங்காணப்பட்டுள்ளது. இத்தகைய நிகழ்ச்சித்திட்டங்களின் வெற்றிகளின் மீது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சுடனும் இலங்கை பொலிசுடனும் இணைந்து 2021 மே மாதத்திலிருந்து சமூக பொலிஸ் சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முழுநேர அடிப்படையில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் பிரிவு ஒவ்வொன்றிற்கும் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு சமூக பங்களிப்பினைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான உதவியினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு உரிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் இரண்டு இளைஞர் யுவதிகளை 'சமூக உதவியாளர் (தொண்டர்)' ஆக சேவையைப் பெற்றுக் கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. உரிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிரந்தரமாக வசிக்கும் 18 வயதிற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் மாணவ தலைவர்களாக செயலாற்றியுள்ள இளைஞர் கழகங்களில் உறுப்பினர்களாகவுள்ள மற்றும் வேறு தொண்டர் குழுக்களில் முனைப்புடன் செயலாற்றும் இளைஞர் யுவதிகளுக்கு இதன் பொருட்டு விண்ணப்பிக்கலாம். இவர்கள் கௌரவ சேவையினை வழங்குவதோடு, எவ்வித கொடுப்பனவோ பிற உரிமைகளோ அவர்களுக்கு கிடைக்கப் பெறமாட்டாது. இலங்கை பொலிசினால் அவர்களுக்கு தொண்டர் அடையாள அட்டையொன்று வழங்கப்படுவதோடு, 06 மாத சேவைக்காலம் கடந்ததன் பின்னர் 'சமூக தலைமைத்துவம்' தொடர்பிலான சேவை சான்றிதழொன்று வழங்கப்படும். உத்தேச நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவையின் உடன்பாட்டினை தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.