• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு ‑ 03 பிரதேசத்தில் 652 அறைகளுடன் கூடிய சொகுசு நகர ஹோட்டலொன்றை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டம்
- தம்ரோ குழுமத்திற்குச் சொந்தமான கம்பனியொன்றான D R Home Appliances (Pvt.) Ltd நிறுவனம், Piyestra Furniture (Pvt.) Ltd நிறுவனம் மற்றும் D R Industries (Pvt.) Ltd நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து 70.4 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட முதலீட்டில் கொழும்பு ‑ 03 பிரதேசத்தில் 652 அறைகளுடன் கூடிய சொகுசு நகர ஹோட்டலொன்றை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டம் 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க திறமுறை அபிவிருத்திக் கருத்திட்ட சட்டத்தின் கீழ் திறமுறை அபிவிருத்தி கருத்திட்டமொன்றாக இனங்காணப்பட்டு இந்த சட்டத்தின் கீழ் உரிய சலுகைகளை வழங்குவதற்கு இலங்கை முதலீட்டுச் சபையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தை திறமுறை அபிவிருத்தி கருத்திட்டமொன்றாக பரிசீலனை செய்யும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி கருத்திட்ட சட்டத்தின் கீழ் திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ள உரிய செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கும் திறமுறை அபிவிருத்தி கருத்திட்டத்திற்காக வழங்கப்படவுள்ள விலக்களிப்புகள் / நிவாரணங்களை திட்டவட்டமாக சுட்டிக்காட்டி 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க திறமுறை அபிவிருத்திக் கருத்திட்ட சட்டத்தின் 3(2) ஆம் பிரிவின் கீழ் வர்த்தமானி அறிவித்தலை பிரசுரிப்பதற்கு பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.