• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் ஏற்றுமதி கைத்தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் கைத்தொழில் பொருட்களை இறக்குமதி செய்தல்
- மாண்புமிகு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட “பொருளாதாரம் 2022 மற்றும் எதிர்கால போக்கு“ என்னும் தலைப்பிலுள்ள அமைச்சரவை விஞ்ஞாபனம் 2022 சனவரி மாதம் 03 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போது அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் ஏற்றுமதி கைத்தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் கைத்தொழில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மாற்று வழிமுறைகளை இனங்காணும் தேவை அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கிணங்க, இத்தகைய பொருட்களை நாட்டிற்கு இறக்குமதி செய்யும் நாடுகளுடன் கலந்துரையாடும் பொருட்டு பின்வரும் அமைச்சரவை உபகுழுக்களை நியமிப்பதற்கு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

(i) மக்கள் சீன குடியரசு அரசாங்கத்துடன் கலந்துரையாடும் பொருட்டு -

* வெளிநாட்டு அமைச்சர் - (தலைவர்).
* வர்த்தக அமைச்சர்.
* கைத்தொழில் அமைச்சர்.
* பெருந்தோட்டத்துறை அமைச்சர்.

(ii) யப்பான் அரசாங்கத்துடன் கலந்துரையாடும் பொருட்டு -

* வெளிநாட்டு அமைச்சர் - (தலைவர்).
* சுகாதார அமைச்சர்.
* வெகுசன ஊடக அமைச்சர்.
* நெடுஞ்சாலைகள் அமைச்சர்.

(iii) மத்திய கிழக்கு நாடுகளுடன் கலந்துரையாடும் பொருட்டு -

* வெளிநாட்டு அமைச்சர் - (தலைவர்).
* இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர். அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர்.
* நீதி அமைச்சர்.