• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அத்தியாவசிய நுகர்வு பொருட்களை சந்தைக்கு விநியோகித்தலை முறைப்படுத்துதல்
- அத்தியாவசிய நுகர்வு பொருட்களை தட்டுபாடின்றி சந்தைக்கு விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான கொள்கை ரீதியிலான சிபாரிசுகள் மற்றும் தீர்வுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

* நிதி அமைச்சர் - (தலைவர்.

* வர்த்தக அமைச்சர்.

* கமத்தொழில் அமைச்சர்.

* துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்.

* கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.

* அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு, கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி, பல நாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர்.

* கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சர்.